முன்னோக்கி ஒரு அடி
முன்னோக்கிய ஒரு அடி என்பது பாலினம், வர்க்கம், இனம் மற்றும் மத அடையாளம் போன்ற நமது அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் பல்வேறு வகையான நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் அடையாளம் காணவும் பிரதிபலிக்கவும் உதவும் ஒரு எளிய பாத்திரமேந்தி நடிக்கும் ஒரு விளையாட்டாகும்.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு பாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் அறையின் ஒரு பக்கத்திற்கு எதிராக வரிசையாக நின்று ஒவ்வொரு முறையும் அவர்களின் பாத்திரம் அவ்விளையாட்டை நடத்துபவர் தெரிவிக்கும் கூற்றோடு ஒத்திசையும் போது முன்நோக்கி ஒரு அடியிணை எடுத்து வைப்பார். அறிக்கைகள் வாசிக்கப்படும்போது, சலுகைகள் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும்
இடையிலான பௌதிக இடைவெளி அதிகமாகிறது.
இந்தப் பக்கத்தில் நீங்கள் இலங்கை மற்றும் இந்திய சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திர அட்டைகள் மற்றும் கூற்றுக்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்
‘முன்னோக்கி ஒரு அடி’ ஒரு முழுமையான பயிற்சியாக இருந்தது. மக்கள் எவ்வாறு பின்தங்கியிருக்கிறார்கள் மற்றும் முத்திரையிடுதல் மற்றும் களங்கப்படுத்துதல் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இது உண்மையில் காட்டியது. இதற்குப்பின்னர் விவாதத்திற்கு எங்களுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.
HAMMAM HADDAD நெறியாளர்
ஜோர்தான் ஹம்மாம் ஹடாத், நெறியாளர், ஜோர்டான்
உங்கள் சமூகத்தில் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்